தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் 30 கடைகளுக்கு சீல் வைப்பு!

ஈரோடு: மாநகராட்சிப் பகுதிகளில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் செயல்பட்ட 30 கடைகளுக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.

30 stores sealed in Erode, which do not follow the social distancing
30 stores sealed in Erode, which do not follow the social distancing

By

Published : May 5, 2020, 4:58 PM IST

கரோனா வைரஸ் நோய் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டமாக இருந்த ஈரோடு, கடுமையான நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், தீவிர சிகிச்சை முறைகள் ஆகியவற்றால் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. தொற்றுநோய் பாதிப்புள்ள 70 நபர்களும் முழுமையாகக் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சிவப்பு மண்டலமாக இருந்த ஈரோடு மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த 21 நாள்களாக கரோனா பாதிப்பில்லாத மாவட்டமாக இருப்பதால், ஆரஞ்சு மண்டலத்திலிருந்து பச்சை மண்டலமாக அறிவிக்கவும் வாய்ப்பிருப்பதால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

தளர்வுகளுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிறு வியாபார கடைகள் நேற்று முதல் செயல்படத் தொடங்கின. குறிப்பாக தேநீர் வழங்காத பேக்கரி நிறுவனங்கள், இறைச்சிக் கடைகள், செல்போன் மற்றும் கணினி விற்பனை, உதிரிபாகங்கள் விற்பனை நிலையங்கள், பெட்டிக் கடைகள் ஆகியவை திறக்கப்பட்டன.

சீல் வைக்கும் மாநகராட்சி அலுவலர்கள்

திறக்கப்பட்ட கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் தகுந்த இடைவெளி முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என மாநகராட்சி அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். அதன்படி ஈரோடு காந்திஜி வீதி, மீனாட்சி சுந்தரனார் வீதி, சத்தி சாலை உள்ளிட்ட சாலைகளில் செயல்பட்டு வந்த செல்போன் கடைகள், மீன் இறைச்சிக் கடைகள், பேக்கரி கடைகளில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கூட்டத்தை அனுமதித்ததைக் கண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து விதிகளை மீறி நோய்ப் பரவலுக்குக் காரணமாக இருப்பதாகக் கூறி 30க்கும் மேற்பட்ட வியாபார கடைகளுக்கு சீல் வைத்து மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details