ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழ்நாடு கர்நாடக மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியிலிருந்து மக்காச்சோளம் மூட்டைகள் ஏற்றிய லாரி ஒன்று உடுமலைப்பேட்டை செல்வதற்காக இன்று திம்பம் மலைப்பாதை வழியாகச் சென்றுகொண்டிருந்தது.
லாரி பழுது
அப்போது, 26-வது கொண்டை ஊசி வளைவில் லாரி பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றது. இதனால், மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆசனூர் காவல் துறையினர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
பின்னர் பண்ணாரியிலிருந்து கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரி 3 மணி நேரத்திற்கு பின் நகர்த்தி நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மற்ற வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன. இதன் காரணமாக தமிழ்நாடு கர்நாடக மாநிலங்களுக்கிடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:திம்பம் மலைப்பாதையில் கன்டெய்னர் லாரி பழுது: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு