ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கூகலூர் கொளத்துகடை பகுதியில் போலி மருத்துவர்கள் கரோனா சிகிச்சை அளிப்பதாக வந்த புகாரையடுத்து, கூகலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சையது இப்ராகிம், வருவாய் கோட்டாட்சியர் பழனிதேவி தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் ஆய்வு நடத்தினர்.
கைது
அங்கு 10ஆம் வகுப்பு படித்த மணிகண்டன் என்பவர் கிளினிக் தொடங்கி எம்பிபிஎஸ் மருத்துவர் போல் று ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவர் நோயாளிகளின் வீட்டிற்கே சென்று சிகிச்சையளித்து வந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த சுபா (30) ஹோயோபதி சிகிச்சைக்கு மட்டுமே அனுமதி பெற்றிருந்த நிலையில், பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததுள்ளார். மேலும், ஓய்வு பெற்ற மருத்துவ உதவி பணியாளரான ராமகிருஷ்ணன் என்பவர் நோயாளிகளுக்கு காய்ச்சல், தலைவலி போன்ற நோய்களுக்கு மருந்து வழங்கியதும் தெரியவந்தது.
ஒரே கிராமத்தில் 3 போலி மருத்துவர்கள் கைது ஒரே கிராமத்தில் 3 போலி மருத்துவர்கள் கைது தலைமறைவு
இதையடுத்து ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று போலி மருத்துவர்களின் கிளினிக், மெடிக்கல் சீல் வைக்கப்பட்டது. மணிகண்டன் கைது செய்யப்புட்ட நிலையில், சுதா வீட்டு காவலில் வைக்கப்பட்டார். தலைமறைவான ராமகிருஷ்ணனை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.