தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாளவாடியில் 2,500 மதுபாட்டில்கள் பறிமுதல்: 5 பேர் கைது!

ஈரோடு: தமிழ்நாடு-கர்நாடக எல்லையான தாளவாடியில் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 2,500 கர்நாடக மாநில மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர்.

தாளவாடியில் 2500 மதுபாட்டில்கள் பறிமுதல்: ஐவர் கைது
தாளவாடியில் 2500 மதுபாட்டில்கள் பறிமுதல்: ஐவர் கைது

By

Published : May 21, 2021, 11:30 AM IST

தமிழ்நாடு-கர்நாடக எல்லையான தாளவாடியில் கர்நாடக மதுபாட்டில் விற்கப்படுவதாகக் கிடைத்தத் தகவலையடுத்து, மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு மற்றும் தாளவாடி காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தலமலையில் இருந்து வந்த காரை நிறுத்திச் சோதனையிட்டபோது, அதில் 900 கர்நாடக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதனையடுத்து சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை தாளவாடி காவல்துறையினர் பறிமுதல் செய்து, ஓட்டுநர் கலீமூல்லாவை கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையில் ஒசூர் சாலை, அருள்வாடி, நெய்தாளபுரம், தலமலை ஆகிய இடங்களில் பதுக்கி வைத்திருந்த 1,600 கர்நாடக மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சேகர், மாதேவா, மஞ்சுநாதன் மற்றும் நாகேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர் சோதனையில் மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்பிலான 2,500 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார், இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தாளவாடி காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:'நல்லாட்சிக்கான முதல்படி' - ஸ்டாலினை பாராட்டிய ஜக்கி

ABOUT THE AUTHOR

...view details