ஈரோடு: தமிழ்நாட்டில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தினந்தோறும் ஆயிரத்தைத் தாண்டி தொற்று எண்ணிக்கை பதிவாகிறது.
நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று (ஜனவரி 22 ) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனிடையே, இன்று இறைச்சிக் கடைகள் விடுமுறை என்பதால், நேற்று இரவு 9 மணி வரை மீன்கடைகளில் கூட்டம் அலைமோதியது.
பவானிசாகர் அணை மீன் விற்பனை நிலையத்தில் 2 டன் மீன்கள் விற்பனை பவானிசாகர் அணை மீன் விற்பனை நிலையத்தில் ரோகு, திலோபி அதிகளவில் விற்பனையானது. ரோகு கிலோ ரூ.160க்கும், திலோபி கிலோ ரூ.120க்கும், கறி மீன் 350க்கும், ஆரா ரூ.250க்கும், அவுரி ரூ.300க்கும் விற்கப்பட்டது. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சுமார் 2 டன் மீன்கள் விற்கப்பட்டன.
மீன் வாங்குவோர் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே மீன்கள் விற்கப்பட்டன.
மீன் சுத்தம் செய்யத் தனி இடம் ஒதுக்கப்பட்டு, அங்குச் சுத்தம் செய்து தரப்பட்டது. அதேபோல சத்தியமங்கலம் கோழி, ஆட்டிறைச்சிக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
இதையும் படிங்க: வடபழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு: பக்தர்களுக்கு அனுமதியில்லை