ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டாரத்தில் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பங்கி பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மே தினம் மற்றும் பொது முடக்கம் காரணமாக, பூ மார்க்கெட் மூடியதால் சம்பங்கி பூக்களை வாங்க வியாபாரிகள் வரவில்லை. கரோனா காரணமாக கோயம்புத்தூர், சிறுமுகை பகுதியில் வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலைகளும் மூடப்பட்டதால் சம்பங்கி பூக்களை கொள்முதல் செய்ய ஆலைகள் முன்வரவில்லை.
வாசனை திரவிய ஆலைகள் மூடல்: 2 டன் பூக்கள் வீண்!
ஈரோடு: வாசனை திரவிய ஆலைகள் மூடப்பட்டதால் 2 டன் பூக்கள் வீணாகியுள்ளன.
2 டன் பூக்கள் வீண்
பெரியகுளம் பகுதியில், சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட பூக்களை விவசாயிகள் பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர். இதனால் அவை அழுகும்நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு டன் சம்பங்கி பூக்களைப் பறித்த விவசாயிகள், அதனை வேன் மூலம் கொண்டு சென்று ஏரியில் கொட்டினர். தற்போது கிலோ 30 ரூபாய் வரை சம்பங்கி பூக்கள் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தேர்தல் வெற்றி கொண்டாட்ட ஊர்வலம், பட்டாசு வெடிப்புக்குத் தடை