தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூங்கிக் கொண்டிருந்தபோது குடிசையில் தீ: தாய், மகள் பலி - சத்தியமங்கலம்

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே தூங்கிக் கொண்டிருந்த போது குடிசையில் தீ பற்றியதால் தாய், மகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகியுள்ளனர்.

accident

By

Published : Jul 4, 2019, 1:02 PM IST

ஈரோடு மாவட்டம் மல்லன்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகன்னா. இவர் உடல் நலக்குறைவால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவரது மனைவி ராஜம்மாள், மகள் கீதா ஆகியோர் மல்லன் குழியில் குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு விறகு அடுப்பில் சமையல் செய்த இவர்கள், சாப்பிட்டு முடித்த பின் வீட்டில் தூங்கியுள்ளனர். நள்ளிரவில் விறகு அடுப்பில் இருந்து வந்த தீப்பிழம்புகள் குடிசை முழுவதும் பரவியதால் தூங்கிக்கொண்டு இருந்த ராஜம்மா, கீதா இருவரும் தீயில் கருகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தீ விபத்தில் தாய் மகள் உயிரிழப்பு!

அதிகாலை அக்கம்பக்கத்தினர் பார்த்துவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தாளவாடி காவல்துறையினர் ஆய்வு செய்ததில் கேஸ் சிலிண்டர் காலியாக உள்ளதால் அது வெடித்து விபத்தாக வாய்ப்பில்லை, விறகில் இருந்த தீ குடிசை முழுவதும் பரவியதால் ஏற்பட்ட விபத்து என்று தெரிவித்தனர். பின்னர், உயிரிழந்த இருவரையும் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details