தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் தங்கம், நகை கொள்ளை - 2 lakh cash stolen in erode

ஈரோடு: மூலப்பாளையத்தில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர் வீட்டில் 13 சவரன் தங்க நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளை

By

Published : May 3, 2019, 11:23 PM IST

ஈரோடு மூலப்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் சரவணன். இவர் நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த வாரம் கேரள மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். நேற்று வீட்டுக்கு திரும்பி வந்த சரவணன், தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

13 சவரன் தங்க நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 13 சவரன் தங்கநகை மற்றும் 2 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து சரவணன் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் கொள்ளை நடந்த வீட்டில் சோதனை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து தாலுக்கா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நிகழ்ந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details