இந்தியாவில் யோகாசனம் என்பது மிக முக்கியக் கலைகளில் ஒன்றாக இருந்துவருகிறது. இந்நிலையில் மாணவ மாணவியர், பொதுமக்கள் எனப் பலரும் இக்கலையை மிகுந்த ஆர்வத்துடன் பயின்றுவருகின்றனர்.
அதிலும் குறிப்பாக பள்ளி மாணவ மாணவியர் இக்கலைகளைக் கற்றுக்கொண்டு மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்குபெற்று பல சாதனைகளைப் புரிந்துவருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்திலுள்ள 17 வயதான பிரியதர்ஷினி என்ற மாணவி கடந்த ஐந்து ஆண்டுகளாக யோகாசனம் கற்றுவருகிறார். இவர் பல போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி போன்ற பதக்கங்களையும் வென்றுள்ளார்.
தற்போது கடந்த ஆறு மாதமாக இலகு வஜ்ராசனம் என்று சொல்லக்கூடிய யோகாசன முறையை தன்னைச் சுற்றி நெருப்பு வளையம் வைத்துக்கொண்டு அணிகளான கம்பி படுக்கையின் மீது ஐந்து நிமிடம் வரை யோகாசனம் செய்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
ஆணி படுக்கையில் யோகாசனம் - 17 வயது சிறுமி சாதனை மேலும் அவர் கூறும்போது, தானொரு நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த மாணவி என்றும் தமிழ்நாடு அரசு தனக்கு உதவிகளைச் செய்துதர வேண்டும் என்றும் தன்னால் மேலும் பல சாதனைகளைச் செய்து தமிழ்நாட்டிற்குச் சிறப்பு தேடி கொடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும படிங்க: பற்றி எரியும் அண்ணா பல்கலைக்கழகம் - உதயநிதி