தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூட்டிய வீட்டில் 16 சவரன் நகை திருட்டு: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு!

ஈரோடு: பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 16 சவரன் தங்க நகை, பணம், வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

கொள்ளியர்களின் சிசிடிவி காட்சி
கொள்ளியர்களின் சிசிடிவி காட்சி

By

Published : Apr 21, 2020, 12:37 PM IST

ஈரோடு அருகேயுள்ள ஈ.பி.பி. நகர் பகுதியில் வசித்துவருபவர் இளங்கோ. இவர் ஆயுத்த ஆடைகள் உற்பத்தி செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவர் கடந்த 18ஆம் தேதி தனது வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் பெருந்துறையிலுள்ள தனது தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதனையறிந்த கொள்ளையர்கள் இன்று அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, வீட்டிலிருந்த 16 சவரன் தங்க நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம், வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

காலையில் அக்கம்பக்கத்தினர் இளங்கோ வீட்டின் கடவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், வந்த இளங்கோ வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த நகை, பணம், வெள்ளிப்பொருள்கள் கொள்ளை போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீரப்பன்சத்திரம் காவல் துறையினர், கைரேகை நிபுணர்கள் உதவியோடு கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களைச் சேகரித்தனர்.

கொள்ளியர்களின் சிசிடிவி காட்சி

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும், அவர்கள் விட்டுச் சென்ற தடயங்களை வைத்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுரையில் பெண்ணின் தாலி செயின் பறிப்பு: கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

ABOUT THE AUTHOR

...view details