தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ. 151.57 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்!

ஈரோடு: ரூ. 151.57 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பயனாளிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

cm palanisamy
cm palanisamy

By

Published : Jul 17, 2020, 12:14 PM IST

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஜூலை 15, 16 17 ஆகிய தேதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி பயணம் மேற்கொண்டு வருகிறார். அதனடிப்படையில், கடந்த 15ஆம் தேதி கிருஷ்ணகிரிக்கும், 16ஆம் தேதி சேலத்துக்கும் சென்றிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக இன்று ஈரோடு வந்த முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு துறைசார்ந்த கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இதில், பள்ளிக்கல்வித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்துறை, பொது சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 21 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் 13 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, பொதுசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை, வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மைத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, தோட்டக்கலைகள் துறை ஆகிய துறைகளின் சார்பில் 76 கோடியே 12லட்சம் மதிப்பீட்டில் 14 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், பல்வேறு துறைகளின் சார்பில் நான்காயிரத்து 642 பயனாளிகளுக்கு 53 கோடி 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு நடத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மொத்தம் 151 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், கரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆவணப்படத்தையும் வெளியிட்டார்.

இதையும் படிங்க:பிறந்தது ஆடி... கோலாகலமாய் நடைபெற்ற தேங்காய் சுடும் விழா

ABOUT THE AUTHOR

...view details