மார்ச் மாதம் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் முடிவு பெற்றன. கரோனா பாதிப்புகளால் வினாத்தாள் திருத்தும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் 12ஆம் வகுப்புகளுக்கான வினாத்தாள் திருத்தும் பணிகள் நாளை (மே 27) காலை முதல் 12 நாட்களுக்கு நடைபெறும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டதில் மொத்தமாக ஆறு மையங்களில் 12ஆம் வகுப்பு வினாத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற உள்ளன. அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை செய்து வந்த நிலையில் இன்று அந்த பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கதிரவன் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுடன் ஆய்வுகளை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் “ஈரோடு மற்றும் கோபியை பொறுத்தவரை ஆயிரது 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வினாத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட உள்ளனர். விடைத்தாள் திருத்தும் மையங்களில் தகுந்த இடைவெளியுடன் ஒரு அறைக்கு 8 ஆசிரியர்கள் மட்டுமே அமர்ந்து பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளனர்.
ஆசிரியர்கள் வந்து செல்ல பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, விடைத்தாள் திருத்தும் மையங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளன.