ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், திம்பம் மலைப்பாதையில் 12 சக்கரம் கொண்ட லாரிகளுக்கு முற்றிலும் தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து மார்ச் 6ஆம் தேதி முதல் பண்ணாரி மற்றும் காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் வனத்துறையினர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்திவந்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறிய கனரக வாகன ஓட்டுநர்கள்: 11 லாரிகள் பறிமுதல்
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, திம்பம் மலைப்பாதையில் பயணித்த 12 சக்கரம் கொண்ட 11 லாரிகளை போக்குவரத்து துறையினர் பறிமுதல் செய்து, ஆசனூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
11 லாரிகள் பறிமுதல்
இந்நிலையில் சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்ற 11 லாரிகளை, கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி ஆசனூரில் தடுத்து நிறுத்தி லாரிகளை பறிமுதல் செய்தார். பின்னர் பறிமுதல் செய்த 11 லாரிகளையும் ஆசனூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தியபிறகே லாரிகள் ஒப்படைக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த 11 ஈரானியர்கள் - போதைப் பொருள் கடத்தலா?