தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விரைவில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு:செங்கோட்டையன் - செங்கோட்டையன்

ஈரோடு: விரைவில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

By

Published : Feb 16, 2021, 12:35 PM IST

ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், "விரைவில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும். தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த அரசு ஆலோசித்து வருகிறது. மாதத்தில் முதல் சனிக்கிழமை மற்றும் 3ஆம் சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தற்போது கூற இயலாது.

உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நம்மிடம் இல்லை உருது படித்த ஆசிரியர்கள் தேவை. டி.ஆர்.பி தேர்வில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்குவது குறித்த ஆலோசித்து வருகிறோம்.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

இந்த ஆண்டு பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details