ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் பிரசித்திப்பெற்ற தண்டுமாரியம்மன் கோயில் விழா, கம்பம் ஆடும் விழா மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
தண்டுமாரியம்மன் கோயில் திருவிழா- நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு - ஈரோடு
ஈரோடு: சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த, பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கம்பத்தைச் சுற்றிவந்து பாரம்பரிய நடனம் ஆடிக் கொண்டாடினர்.
செவ்வாய்க்கிழமை இரவு அம்மன் அழைப்பும், புதன்கிழமை காலை பக்தர்கள் குண்டம் இறங்குதல் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், நேற்று மாலை இக்கோயில் முன்பாக நடப்பட்ட கம்பத்திற்குப் பெண்கள் மஞ்சள் பூசி வழிபட்டனர்.
தொடர்ந்து, கம்பத்தைச் சுற்றிவந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மேளதாள இசைக்கேற்ப நடனமாடி மகிழ்ந்தனர். பெண்கள் தட்டில் பூசை பொருள்களுடன் தீபம், மாவிளக்கு வைத்து ஊர்வலமாகச் சென்றது அனைவரையும் கவர்ந்தது. இளம்பெண்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலம் வெகு விமரிசையாக நடந்தது.