தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100 நாள் வேலைத்திட்டம் மீண்டும் தொடக்கம்! - சத்தியமங்கலம் பகுதி

ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் கரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்ட 100 நாள் வேலைத்திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது.

100 நாள் வேலைத்திட்டம் மீண்டும் தொடக்கம்!
100 நாள் வேலைத்திட்டம் மீண்டும் தொடக்கம்!

By

Published : Jun 19, 2021, 9:20 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு மாத காலமாக 100 நாள் வேலை திட்ட பணிகள் கிராம ஊராட்சிகளில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், கூலித் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இச்சூழலில், ஈரோடு மாவட்டத்தில் 224 கிராம ஊராட்சிகளில் தற்போது 100 நாள் வேலை திட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சத்தியமங்கலம் அருகே உள்ள உத்தண்டியூர் ஊராட்சியில் இன்று (ஜூன். 19) 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அப்பகுதியில் உள்ள ஓடையை ஆழம், அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று 100 நாள் வேலைக்கு சென்று வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.

100 நாள் வேலைத்திட்டம் மீண்டும் தொடக்கம்!

சமூக இடைவெளியை கடைப்பிடித்து தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டு வருகிறது. இதனால், கூலித் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: தலையில் கல்லை போட்டு கொலை: காசநோய் மருத்துவமனையில் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details