தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புஞ்சை புளியம்பட்டி காவலர்கள் 10 பேருக்கு கரோனா! - Corona confirmed for 10 Police Personnel in Punchaipuliyampatti Police Station

ஈரோடு: புஞ்சை புளியம்பட்டி காவல் நிலைய காவலர்கள் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்தில் வேப்பிலை தோரணம்
புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்தில் வேப்பிலை தோரணம்

By

Published : Jun 2, 2021, 8:23 PM IST

தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவிவருவதால் தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி, பவானிசாகர், தாளவாடி ஆகிய மூன்று வட்டாரங்களிலும் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளது.

10 காவலர்களுக்கு கரோனா

இந்நிலையில், புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 10க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, புகாரளிக்க வரும் பொதுமக்கள் கூட்டம் சேராத வகையில் காவல் நிலையம் முன்பு கயிறு கட்டி காவலர்கள் தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். மேலும் தடுப்புக் கயிற்றில் வேப்பிலையை தோரணமாகக் கட்டி தொங்கவும் விட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details