தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழையின் காரணமாக தனியார் பேருந்து விபத்து - 10 பேர் படுகாயம்! - 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளார்கள்

மழையின் காரணமாக தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மழையின் காரணமாக தனியார் பேருந்து விபத்து- 10 பேர் படுகாயம்..!
மழையின் காரணமாக தனியார் பேருந்து விபத்து- 10 பேர் படுகாயம்..!

By

Published : Aug 5, 2022, 8:52 PM IST

ஈரோடு: அரச்சலூர் அருகே உள்ள கண்ணபுரம் என்ற இடத்தில் தனியார் பேருந்து பழனியில் இருந்து ஈரோடு சென்று கொண்டு இருந்தது.

அப்போது தூய்மைப்பணியாளர் விஜயா என்ற பெண் குறுக்கே வந்த காரணத்தால் பேருந்தை திடீரென நிறுத்த ஓட்டுநர் தினேஷ் என்பவர் முயற்றுள்ளார். அப்போது மழை பெய்து சாலை முழுவதும் ஈரப்பதமாக இருந்த காரணத்தால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பேருந்தில் பயணம் செய்த விஜயா, பழனியம்மாள், விஜயலட்சுமி, ராசு மற்றும் மேலும் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளார்கள். உடனடியாக அருகில் உள்ள நபர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளார்கள். இது குறித்து அரச்சலூர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

மழையின் காரணமாக தனியார் பேருந்து விபத்து - 10 பேர் படுகாயம்!

இதையும் படிங்க:விழுப்புரம் மருதூர் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - போலீசார் குவிப்பு

ABOUT THE AUTHOR

...view details