தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி காவல் நிலையம் முன்பு இளைஞர் தீக்குளிக்க முயற்சி! - dindigul news

திண்டுக்கல்: காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி, பழனி நகர காவல் நிலையம் முன்பு இளைஞர் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெய்க்கரப்பட்டி  மனைவியை கண்டுபிடித்துத் தரக்கோரி இளைஞர் தீக்குளிக்க முயற்சி  திண்டுக்கல் செய்திகள்  dindigul news  youth try to commit suicide
மனைவியை கண்டுபிடித்துத் தரக்கோரி காவல் நிலையம் முன்பு இளைஞர் தீக்குளிக்க முயற்சி

By

Published : Jul 18, 2020, 8:29 AM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரபட்டி கிராமத்தைச் சேர்ந்த உசைனுக்கு (37), தஸ்லீமா என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். உசேனின் மனைவி தஸ்லீமா கடந்த 4 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக நெய்க்காரபட்டி காவல் நிலையத்தில் உசேன் புகார் அளித்துள்ளார்.

காவலர்கள் புகாரை அலட்சியம் செய்ததால் மனமுடைந்த உசேன், பழனி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து தனது இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது, சம்பவ இடத்தில் இருந்த காவலர்கள் உடனடியாக உசேனை மடக்கிப் பிடித்து தடுத்து நிறுத்தினர். இந்தச் சம்பவத்தால் பழனி நகர காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி செய்த நபர்

சம்பவ இடத்தில் இருந்த பழனி டிஎஸ்பி சிவா, உசேனை அழைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானப்படுத்தினார். காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சிசிடிவி கேமராவை திருப்பி வைத்துவிட்டு கொள்ளை முயற்சி

ABOUT THE AUTHOR

...view details