திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு அண்ணா திடலில் பேரூராட்சி சார்பாக அமைக்கப்பட்ட மின்விளக்கு கோபுரத்தின் கீழ் நேற்றிரவு தாசிரிப்பட்டியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ராஜேஷ் என்பவர் மதுபோதையில் வந்து அமர்ந்திருக்கிறார்.
திண்டுக்கல்லில் மின்கசிவால் இளைஞர் பலி! - ஆத்துமேடு அண்ணா திடலில்
திண்டுக்கல்: ஆத்துமேடு அண்ணா திடலில் வைக்கப்பட்டுள்ள மின்விளக்கில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தாசிரிப்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
youth-died-by-electric-shock
அப்போது ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அவர் பரிதாபமாக உயிரிழிந்தார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த காவலர்கள் ராஜேஷின் உடலைக்கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'பறவைகளின் தாகத்தை தீர்க்க ரயில்வே காவல் துறை புதுமுயற்சி'