திண்டுக்கல் மாவட்டம் தெற்கு நகர் காவல் நிலையம் அருகே இளைஞரை கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு உடனடியாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த காவல் துறையினர் ரத்த வெள்ளத்தில் இருந்த நபரை மீட்டு அரசு மருத்துமனையில் சேர்த்தனர்.
இதைத்தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், வெட்டுக்காயம் ஏற்பட்ட நபர் கண்ணன் (35) என்பதும் இவருக்கு சிலருடன் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருப்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வரும் காவல் துறையினர் தப்பியோடிய கும்பலைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:பெண்ணுக்கு கல்தா கொடுத்த காதலன் - தொடரும் தர்ணா போராட்டம்!