தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிர்வாணப் படத்தை வெளியிட்ட இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த ஊர் மக்கள் - குற்ற செயல்கள்

காதலிப்பதாக கூறி கல்லூரி மாணவியை ஆடையில்லாமல் படம் எடுத்து, அதை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்துள்ளனர்.

Crime
Crime

By

Published : Sep 5, 2021, 8:49 AM IST

திண்டுக்கல்: குஜிலியம்பாறை தாலுகாவை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு, சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா நரசிங்கபுரத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞர் மேகநாதன் என்பவருடன் இன்ஸ்டாகிராமில் பழகம் ஏற்பட்டது. பின்பு அது காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் மேகநாதன் கல்லூரி மாணவியுடன் வீடியோ காலில் பேசும்போது கல்லூரி மாணவியை நிர்வாணமாக இருக்க வேண்டும் எனக்கூறி அதை மேகநாதனின் செல்போனில் பதிவு செய்துள்ளார்.

தொடர்ச்சியாக கல்லூரி மாணவியின் நிர்வாண வீடியோ காட்சிகளை காண்பித்து பலமுறை தனிமையில் இருப்பதற்கு பயன்படுத்தி உள்ளார்.

இதனால் கல்லூரி மாணவி மேகநாதனிடம் இருந்து விலக முயற்சி செய்த போது அவரிடம் இருக்கும் வீடியோ காட்சிகளை வைத்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இதையடுத்து கல்லூரி மாணவி தனக்கு நடந்தவைகளைத் தன் பெற்றோரிடம் கூறியபோது அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக கல்லூரி மாணவிக்கு திருமணம் நிச்சயதார்த்தம் செய்யதுள்ளனர்.

இதை தெரிந்து கொண்ட மேகநாதன் கல்லூரி மாணவியின் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார்.

இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் வடமதுரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேகநாதனை அழைத்த காவல்துறையினர் அவரை கண்டித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு மேகநாதன் கல்லூரி மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீண்டும் அவரிடமிருந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை வைத்து மிரட்டி உள்ளார். கல்லூரி மாணவியின் சொந்த ஊருக்கு வந்த மேகநாதனை ஊர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் கையும் களவுமாகப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

பலத்த காயம் ஏற்பட்டு மேகநாதன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மேகநாதன் தொடர்ச்சியாக தன்னை துன்புறுத்தி வருவதாகவும் தன்னை கொலை செய்துவிடுவதாக கூறுவதாகவும் எரியோடு காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details