திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த அஸ்கர் (23) என்ற இளைஞர் தேநீர் கடையில் வேலை பார்த்துவருகிறார்.
10ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது! - போக்சோ சட்டம்
திண்டுக்கல்: கொடைக்கானலில் 10ஆம் வகுப்பு பள்ளி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கொடைக்கானல் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
posco
இவர் 10ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவரை காதலித்து ஏமாற்றிவந்துள்ளார். தொடர்ந்து பள்ளி மாணவிக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்ட நிலையில் அவரை வீட்டிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சைல்ட் லைன் அமைப்பினர் கொடுத்த புகாரை அடுத்து கொடைக்கானல் காவல் துறையினர், அஸ்கரை போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.