கரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் மட்டுமே கிடைக்கின்றது. இதனிடையே வீடுகளின்றி சாலையோரம் வாழும் மக்கள் உணவின்றி பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
திண்டுக்கல் பேகம்பூர் இளைஞர்கள் ஊர் திரும்ப முடியாமல் இருப்பவர்கள், ஆதரவற்றோர் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்கி வருகின்றனர். பஸ் நிலையம், பூ மார்க்கெட், அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஊர் செல்ல முடியாமல் தவிக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த 15 நபர்களுக்கு உணவளித்து வருகின்றனர்.
மேலும் ரயில் நிலையம் அருகில் வசித்துவரும் 50க்கும் மேற்பட்ட மனநிலை பாதிக்கப்பட்டோருக்கு தொடர்ந்து உணவளித்து வருகின்றனர். இவர்களின் இந்த சேவையால் ஆதரவற்ற, மனநிலை பாதிக்கப்பட்ட மக்கள் பசியின்றி உள்ளனர்.