திண்டுக்கல்: கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கேரள மாநிலம், கொல்லம் கவநாடு பகுதியைச்சேர்ந்த பினு என்ற ஆதிநாராயணன் (29) என்ற இளைஞர் பணிக்குச்சேர்ந்துள்ளார்.
தொடர்ந்து அங்கு பணி செய்து வந்த நிலையில் தனியார் தங்கும் விடுதியில் யாரும் இல்லாத இரவு நேரத்தில் விடுதி உரிமையாளர் அறையில் இருந்த 53 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 2 செல்போன்கள் ஆகியவற்றைத் திருடிவிட்டு, உரிமையாளரின் காரையும் எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டார்.
இதுகுறித்து விடுதி உரிமையாளர் கொடுத்தப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர், தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கேரள இளைஞர் ஆதிநாராயணன், கொடைக்கானல் பகுதியில் மீண்டும் திருட வந்திருப்பது தெரியவந்தது.