திண்டுக்கல் பேருந்து நிலையத்தை சுற்றி 5க்கும் மேற்பட்ட அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு வரக்கூடிய மது பிரியர்கள் மது அருந்திவிட்டு உச்சகட்ட போதையில் சாலைகளில் விழுந்து கிடப்பது வாடிக்கையான ஒன்று.
ரகளையில் ஈடுபட்ட இளைஞர்
அதே நேரத்தில் சில போதை ஆசாமிகள் மது போதையின் உச்சத்திற்கு சென்று பேருந்து நிலையத்தில் இருந்து வரக்கூடிய பேருந்துகளை வழிமறித்து ரகளையில் ஈடுபடுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் இது போன்று பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், நேற்று (ஜூலை 29) பேருந்து நிலையம் அருகே திருவள்ளூர் சாலையில் உச்சகட்ட மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் திடீரென திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டார்.
பொதுமக்கள் கோரிக்கை
அதோடு பேருந்து ஓட்டுநருக்கு வணக்கம் வைப்பதும், பின்னர் பேருந்துக்கு அடியில் படுத்துக் கொண்டு பேருந்தை இயக்க விடாமல் தடுப்பதுமாக இருந்தார். சாலையில் சென்றவர்கள் எதுவும் செய்ய முடியாமல் திணறிய நிலையில் நீண்ட நேர ரகளைக்குப் பின்னர் போதையில் இருந்த இளைஞர் பேருந்துக்கு வழி விட்டு ஒதுங்கினார்.
இதையும் படிங்க: சரக்கு போதும்;சைடிஷ் வேண்டாம் - குரங்கு அடித்த லூட்டி