திண்டுக்கல் மாவட்டம் ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் பிரதாப் (25). பூ கடையில் வேலை பார்த்து வந்தார். இவர், வேடசந்தூரிலிருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் நேற்றிரவு (மே 5) 10 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பிரசாந்த் தூக்கி வீசப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.