தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது! - பாலியல் தொல்லை

திண்டுக்கல்லில் 14 வ‌ய‌து சிறுமிக்குப் பாலிய‌ல் தொல்லை கொடுத்த‌ இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தன‌ர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்

By

Published : Jun 27, 2021, 11:44 AM IST

திண்டுக்கல்: கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவரது மகன் யுவராஜ் (23). இவர், அதே சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்குப் பாலிய‌ல் தொந்த‌ர‌வு கொடுத்துள்ளார்.

இத‌னையறிந்த சிறுமியின் பாட்டி, யுவராஜை தட்டிக் கேட்டுள்ளார். இத‌னால் ஆத்திரமடைந்த இளைஞர் சிறுமியின் பாட்டியின் கையைக் க‌டித்து வைத்துவிட்டு அங்கிருந்து த‌ப்பினார்.

போக்சோவில் இளைஞர் கைது:

இதனால், அவருக்கு பலத்த காயமடைந்த நிலையில் கொடைக்கானல் அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் அனும‌தித்த‌னர். இது குறித்து மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் யுவராஜை போக்சோ சட்டத்தின் கீழ், கைது செய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமியை மிரட்டி நகை, பணம் பறித்த இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details