திண்டுக்கல் மாவட்டம் புளிய ராஜக்காபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தனம். இவர் மூன்று பிள்ளைகளுடன் அதேப் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டின் அருகே தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இலவச கழிப்பறை கட்டுவதற்கு முயற்சி செய்துள்ளார்.
ஆனால் அவரது கணவரின் அண்ணன் மாமுண்டி வீட்டின் அருகே கழிப்பறை கட்ட விடாமல் எதிர்ப்பு தெரிவித்தும், தகாத வார்த்தைகளால் பேசியும் அவரை தாக்க முயறன்றுள்ளார். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் புகாரை ஏற்க மறுத்துள்ளனர்.