திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக வேடசந்தூர் காவல் ஆய்வாளர் கவிதாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
கஞ்சா பதுக்கிவைத்திருந்த இரண்டு பெண்கள் கைது! - கஞ்சா விற்பனை
திண்டுக்கல்: வேடசந்தூர் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கிவைத்திருந்த 2 பெண்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அண்ணாநகரைச் சேர்ந்த சகுந்தலா என்பவர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. தொடர்ந்து அவரைக் கைதுசெய்து விசாரணை செய்ததில் திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனி பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவர் கஞ்சா வாங்கித் தருவது தெரியவந்தது.
பிறகு சத்யா வீட்டில் சோதனை செய்ததில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டது. மேலும் இரண்டு பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சம்பந்தப்பட்ட முக்கியக் குற்றவாளியான விக்னேஷ் என்பவரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.