தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்ணிடம் நடத்துனர் மதுபோதையில் தகராறு - அரசுப் பேருந்து நடத்துநர்

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பேருந்தில் கைக்குழந்தையுடன் பயணம் செய்த பெண்ணை நடத்துனர் மதுபோதையில் தகாத வார்த்தையில் திட்டி பாதியில் இறக்கிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணிடம் தகராறு செய்த நடத்துநர்
பெண்ணிடம் தகராறு செய்த நடத்துநர்

By

Published : Apr 18, 2022, 7:43 AM IST

திண்டுக்கல் - மாமரத்துபட்டி செல்லும் அரசுப் பேருந்தில் நேற்று (ஏப். 17) யசோதா தேவி என்ற பெண் தனது இரண்டரை வயது மகன் மற்றும் கைக்குழந்தையுடன் பயணம் செய்தார். அப்போது பேருந்தின் நடத்துனர் அப்பெண்ணின் இரண்டரை வயது மகனுக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதற்கு, நடத்துனரிடம் அப்பெண் தனது இரண்டரை வயது மகனுக்கு எதற்கு டிக்கெட் எடுக்க வேண்டும் எனக் கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மழை வருவதை பொருட்படுத்தாமல் இரண்டரை வயது மகன் மற்றும் கைக்குழந்தையுடன் பயணம் செய்த பெண்ணை அய்யலூர் பேருந்து நிறுத்தம் முன்பு நடத்துனர் இறக்கி விட்டுள்ளார்.

பெண்ணிடம் தகராறு செய்த நடத்துநர்

மேலும் அந்தப் பெண்ணை தகாத வார்த்தையில் நடத்துனர் திட்டியுள்ளார். சக பயணிகள் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இது குறித்து வடமதுரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் நடத்துனர் பால்பாண்டி மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:நெல்லையில் பயங்கரம்... நிலத்தகராறில் ஓட ஓட அரிவாள் வெட்டு... மூன்று பேர் மரணம்..

ABOUT THE AUTHOR

...view details