திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி ரயில்வே பாதை அருகே உள்ள தோட்டத்தில் அரை நிர்வாணத்துடன் வடமாநில பெண், காயங்களுடன் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் காவல் துறையினரின் சோதனையில் அந்தப் பெண் இருந்த இடத்தில் மதுபாட்டில் கிடைத்துள்ளது.