திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பட்டா நிலங்கள் மற்றும் வனப்பகுதிகள் காய்ந்தன. இந்நிலையில் கொடைக்கானல் அருகே வில்பட்டி கிராமம், புலியூர் கிராமத்தில் பட்டா நிலங்களில் காட்டு தீயானது எரிந்து வருகிறது. இப்பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து வருவதால் தீ வேகமாக பரவி வருகிறது.
கொடைக்கானல் அருகே பட்டா நிலங்களில் எரியும் காட்டு தீ - வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே புலியூர் கிராமத்தில் பட்டா நிலங்களில் காட்டு தீ எரிந்து வருகிறது. தீயானது பரவி வருவதால் வனப்பகுதிக்குள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
![கொடைக்கானல் அருகே பட்டா நிலங்களில் எரியும் காட்டு தீ எரிந்து வரும் காட்டு தீ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11222386-430-11222386-1617173758735.jpg)
எரிந்து வரும் காட்டு தீ
தீயானது தொடர்ந்து எரிந்து வருவதால் அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.
இதையும் படிங்க:அதிமுகவில் இணைந்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்