திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முக்கிய பகுதிகளான நாயுடுபுரம், பாம்பார்புரம், அப்சர்வேட்டரி, செண்பகனூர், அண்ணாசாலை, பேருந்துநிலையப் பகுதி, டிப்போ, எரிச்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காட்டெருமைகள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன.
இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சாலைகளில் காட்டெருமைகள் கூட்டமாக வந்து வாகனங்களை வழி மறித்து போக்குவரத்திற்கு பெரும் இடையூரை ஏற்படுத்துகின்றன.
இதனால், வாகன ஓட்டிகள் பதற்றம் அடைகின்றனர். இதற்கிடையில், காட்டெருமைகள் பகல் நேரம் மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பெரும் அட்டகாசம் செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.