தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள்: இம்முறை என்ன செய்தது தெரியுமா? - காட்டு யானை

திண்டுக்கல்: கொடைக்கான‌ல் கீழ்ம‌லை அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்யும் காட்டு யானைகளை விரட்டியடிக்க வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாய நிலத்திற்குள் புகுந்த யானை
விவசாய நிலத்திற்குள் புகுந்த யானை

By

Published : Apr 8, 2021, 5:57 PM IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலையில் பாரதி நகர், அண்ணா நகர், கள்ளக்கிணறு, புல்லாவெளி, பேத்துப்பாறை, அஞ்சிவீடு, தாண்டிக்குடி உள்ளிட்டப் பல்வேறு மலைக்கிராமங்கள் அமைந்துள்ளன.

மலைக்கிராமங்களில் விவசாயமே பிரதானம்

இந்தப் பகுதிகளில் விவசாயமே பிரதானத் தொழிலாக இருந்து வருகிறது. இங்கு வாழை, காப்பி, அவரை, கேரட், பலா உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக யானைக் கூட்டம் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்துப் பல முறை வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வனத் துறையினர் மீது அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

மீண்டும் வந்த காட்டு யானை

இந்நிலையில், இன்றும் (ஏப்.08) அப்பகுதியிலுள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானை ஒன்று பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.

விவசாய நிலத்திற்குள் புகுந்த யானை

இதனால், தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர். மேலும், வனப்பகுதிகளிலிருந்து விவசாய நிலங்களுக்குள் புகும் யானைக் கூட்டங்களை விரட்ட, வனத்துறைக் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 12 ஆண்டுகளுக்கு முன்பு சிகிச்சையளித்த மருத்துவரை மறக்காத யானை!

ABOUT THE AUTHOR

...view details