திண்டுக்கல்:மதுப்பழக்கத்தால் பணம் கேட்டு மனைவியை கொலை செய்ய முயன்ற கணவனை, தற்காப்புக்காக மனைவி தாக்கியதில் கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை தொடர்ந்து கொலை குறித்த விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம், கோவில்பட்டி ராஜா குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(40). இவர் வெளிமாநிலங்களுக்கு செல்லும் டிப்பர் லாரிகளை ஓட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகிய நிலையில் மனைவி பாண்டீஸ்வரி (33) மற்றும் 4 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளது. இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான ராஜேந்திரன் 24 மணி நேரமும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாகவே அதிக மது போதையில் இருந்த ராஜேந்திரன் மனைவியிடம் மது வாங்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் பணம் தராவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையில் ஐடி பெண் ஊழியர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு!