தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்ப பிரச்சனையில் கணவரை அரிவாளால் வெட்டி கொன்ற மனைவி..! போலீசார் விசாரணை! - crime news

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் பல நாட்களாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் நேற்று இரவு மனைவி கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப பிரச்சனையில் கணவரை அரிவாளால் வெட்டி கொன்ற மனைவி! போலீசார் விசாரணை
குடும்ப பிரச்சனையில் கணவரை அரிவாளால் வெட்டி கொன்ற மனைவி! போலீசார் விசாரணை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 11:17 AM IST

திண்டுக்கல்: பழனி வடபருத்தியூர் பகுதியில் குடும்ப பிரச்சினையில் கட்டிய கணவரை மனைவியே வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது வடபருத்தியூர் எனும் கிராமம். இந்த பகுதியில் நாட்டு துரை கருப்பாத்தாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கணவர் நாட்டு துரை விவசாய தொழிலில் ஈடுபடுபவர். கணவன் மனைவி இருவருக்கும் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இதனால் அடிக்கடி கணவன் மனைவி இருவருக்கும் வாக்குவாதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் நாளடைவில் இந்த வாக்குவாதம் சண்டையாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் நாட்டு துரை தன் மனைவியிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; பேராசிரியரை கைது செய்யக் கோரி சக மாணவர்கள் போராட்டம்

இந்நிலையில் மனைவி கருப்பாத்தாள் தற்காப்புக்காக தன் கணவரிடம் இருந்த அரிவாளை பிடுங்க முயன்று உள்ளார். ஆனால் கணவர் விடாமல் மீண்டும் தாக்கிய நிலையில் ஒரு கட்டத்தில் மனைவி கருப்பாத்தாள், கணவர் நாட்டு துரையிடம் இருந்த அரிவாளை பிடுங்கி சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் கணவர் நாட்டு துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த நாட்டு துரையின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மனைவி கருப்பாத்தாளை கீரனூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சனையில் கணவரை மனைவியே அறிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சேலத்தில் பெண்ணை கொலை செய்துவிட்டு ஆண் தற்கொலை.. தகாத உறவு காரணமா?

ABOUT THE AUTHOR

...view details