திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள எட்டி குளத்துப்பட்டியைச்சேர்ந்தவர் ஆனந்த்(30). தனியார் சோலார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பாடியுரைச் சேர்ந்த வீர அழகு என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.
இதனால் வீர அழகு தனது பெற்றோர் வீட்டிற்குச்சென்று தங்கினார். அதைத்தொடர்ந்து தனியார் பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். கடந்த வாரம் ஆனந்த், வீர அழகுவைப் பார்க்க அவரது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளார். ஆனால், வீரஅழகு அங்கு இல்லை. மாமனாரும் முறையான பதிலளிக்கவில்லை.