திண்டுக்கல்:நிலக்கோட்டை அருகேயுள்ள கே.குரும்பப் பட்டியை சேர்ந்த விவசாயி சென்றாயன் (39). இவர் கடந்த மார்ச் 10ஆம் தேதி அன்று அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டதாக நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி, வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர். சென்ராயன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை மொக்கராஜ் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து, நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் பாலகுரு தலைமையில் விசாரணை நடந்தது.
அம்பலமான நாடகம்
அதில் சென்றாயன் மனைவி வனிதாவை அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. அவர் காவல் துறையில் கொடுத்த வாக்குமூலத்தில், தனக்கும் கே .குரும்பப்பட்டியைச் சேர்ந்த அய்யனாருக்கும் (50) திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், இடையூறாக இருந்த கணவர் சென்றாயனை இருவரும் இணைந்து கொன்றுவிட்டு நாடகமாடியதாகவும் தெரிவித்தார்.