திண்டுக்கல்:பழனி அருகே ஆர்.ஜி. நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஜெகதா. கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி செல்வராஜ் சின்னக்கலையம்புத்தூர் - நெய்க்காரப்பட்டி சாலையில் அரிமா சங்க அலுவலகம் அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்தார். இதற்கிடையே, செல்வராஜின் மனைவி, தனது கணவரை காணவில்லை என பழனி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர், செல்வராஜ் இறந்து கிடந்த தகவல் கிடைத்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்டமான உடற்கூராய்வு அறிக்கையில் செல்வராஜ் கழுத்தை நெறித்ததால் உயிரிழந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி சத்யராஜ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக ஜெகதாவின் செல்ஃபோன் எண்ணைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.