திண்டுக்கல்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கனியாமூர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மனைவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனையடுத்து, மாணவி இறப்பிற்கு நீதிகேட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்து, கலவரமாக மாறியது. இந்த கலவரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி பலரையும் கைது செய்து வருகின்றனர்.
மாணவி இறப்புக்கு நீதி கேட்டு வாட்ஸ்-அப் குழு - பழனியில் இளைஞர் கைது - suicide case
வாட்ஸ்-அப் குழு அமைத்து கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தற்காக பழனியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாட்சப்குழு அமைத்து கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக போராட்டத்திற்கு அழைப்பு- பழனியில் இளைஞர் கைது
இதன்படி, திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் கோகுல் (23) என்ற இளைஞர் வாட்ஸ்-அப் குழு அமைத்து கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் சம்பவம் தொடர்பாக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் படி, கோகுலை கைது செய்த பழனி நகர காவல்துறையினர் கிளைச் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கைது - புதிய எஸ்பி பேட்டி