திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கொண்ட பிரபல சுற்றுலாத்தலம். இவ்வாறான இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் மட்டுமல்லாது, இங்கு விளையக்கூடிய மலை காய்கறிகளும் பிரபலமாக உள்ளன. குறிப்பாக மலைப்பகுதியில் விளையக்கூடிய உருளைக்கிழங்கு, வெள்ளை பூண்டு, பீன்ஸ் மற்றும் கேரட் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது.
இயற்கை விவசாயத்தில் அசத்தும் எம்பிஏ பட்டதாரி குறிப்பாக கொடைக்கானலைச் சுற்றி இருக்கக் கூடிய 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இதுவே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் வடகவுஞ்சி கிராமத்தில் குத்தகைக்கு விவசாய நிலத்தை எடுத்து, அதில் இயற்கையாக விவசாயம் செய்து வருகிறார் நந்தகுமார்(26).
இயற்கை விவசாயத்தில் அசத்தும் எம்பிஏ பட்டதாரி எம்பிஏ பட்டதாரியான இவருக்கு விவசாயம் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக வடகவுஞ்சி கிராமத்தில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார். அதில் உருளைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு உள்ளிட்ட மலை காய்கறிகளை பயிரிட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார்.
மேலும் அப்பகுதியில் இருக்கக்கூடிய காய்கறிகள் மற்றும் பழங்களை இடைத்தரகர்கள் இன்றியும் விற்பனை செய்து வருகிறார். இது மட்டுமல்லாமல் தினமும் விவசாயம் குறித்து சமூக வலைதளங்களான முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் பதிவு செய்து வருவது இணையதள வாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
எம்பிஏ பட்டதாரி நந்தகுமார் இணையதளத்தையே முதலீடாக வைத்து வாட்ஸ் ஆப் குழு மூலம் வாடிக்கையாளர்களுக்கு இடைத்தரகர்கள் இன்றி, விளைபொருட்களை கூரியர் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வருகிறார். மேலும் மலைத்தேன் உள்ளிட்டவை வாடிக்கையாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய இளம் விவசாயிகள் உருவாக வேண்டும் என்பதே இவரது ஒற்றைக் கருத்தாக திகழ்ந்து வருகிறது. மேலும் பழமையை மறந்து வரும் இக்காலச் சூழலில் மண் வீடு, மண் சட்டியில் சமையல் செய்து பழமையை புதுமையாக மாற்ற முயற்சி செய்தும் வருகிறார்.
இதையும் படிங்க:நெல்லை அதிசய கிணறு உருவானது எப்படி? - ஐஐடி குழு விளக்கம்