தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலக்கோட்டை வாரச்சந்தையில் வியாபாரிகள் கடைகள் அமைக்கவில்லை! - Nilakkottai weekly market

திண்டுக்கல்: நிலக்கோட்டை வாரச்சந்தை சிறு வியாபாரிகள் கடைகள் அமைக்கவில்லை.

கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய வாரச்சந்தை வியாபாரிகள்
கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய வாரச்சந்தை வியாபாரிகள்

By

Published : Apr 11, 2021, 1:36 AM IST

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வாரச்சந்தை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த வாரச் சந்தையில் வியாபாரிகள் வாரந்தோறும் சனிக்கிழமை கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்த வாரச்சந்தையில் நிலக்கோட்டை சுற்றியுள்ள பிள்ளையார்நந்தம், அனைப்பட்டி, விளாம்பட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களில் இருந்து மக்கள் குறைந்த விலையில் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொள்வதும் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று (ஏப்.10) வியாபாரிகள் கடைகளை அமைக்கவில்லை. மத்திய-மாநில அரசுகளின் உத்தரவை ஏற்று தாமாக முன்வந்து வியாபாரிகள் கடைகள் அமைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இது அறியாமல் சந்தைக்கு வந்த மக்கள் கடைகள் இல்லாததை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதையும் படிங்க: 'வெற்றிலைப் பாக்குடன் மாஸ்க் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு'

ABOUT THE AUTHOR

...view details