தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் 8 மாதங்களுக்குப் பிறகு வாரச்சந்தை திறப்பு...! - திண்டுக்கல் வாரச்சந்தை

திண்டுக்கல்: கொடைக்கானலில் எட்டு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட வாரச்சந்தையில் தகுந்த இடைவெளியுடன் காய்கறி விற்பனையில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Weekly market opens in Kodaikanal after 8 months ...!
Weekly market opens in Kodaikanal after 8 months ...!

By

Published : Oct 11, 2020, 12:44 PM IST

தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றால் வாரச்சந்தை மூடப்பட்டிருந்தது. ஐந்தாம் கட்ட தளர்வுகளில் நகர்ப்புறம், ஊரக பகுதிகளில் வாரச்சந்தை திறக்கலாம் என தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயங்கும் சந்தை தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக வாரச்சந்தையில் 500க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள் இயங்கும். ஆனால் தற்போது சந்தையில் 100 கடைகள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதில் வாரச்சந்தைக்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரக்கூடாது, குழந்தைகளுக்கு அனுமதி இல்லை, முகக்கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதிப்பதாக கொடைக்கானல் நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது .

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் காய்கறிகள் விற்பனையாகும் நிலையில், குறைந்த அளவே காய்கறிகள் கொண்டு வந்திருப்பதால் விற்பனையின் அளவு சரியும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்

ABOUT THE AUTHOR

...view details