திண்டுக்கல்:பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் எளிதாக மலைமீது சென்று சாமி தரிசனம் செய்வதற்காக படிப்பாதை, மின்இழுவை ரயில் மற்றும் ரோப்கார் ஆகியவை உள்ளன.
ரோப்கார் சேவை வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மின் இழுவை ரயிலில் செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் மின் இழுவை ரயிலில் செல்வதற்காக டிக்கெட் வழங்கப்படும் இணையதளத்தில் தொழில்நுட்பகோளாறு காரணமாக டிக்கெட் வழங்குவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் டிக்கெட் பெற்று கோயிலுக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.