திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "இடைத்தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். இந்த வெற்றியை அதிமுக அரசின் நற்சான்றுக்கு பரிசாக மக்கள் அளிப்பார்கள் " என்றார்.
7 பேர் விடுதலையில் எந்த தாமதமும் செய்யவில்லை: செல்லூர் ராஜு - sellur raju
திண்டுக்கல்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ஏழு பேரின் விடுதலையில் தமிழ்நாடு அரசு எந்த தாமதமும் செய்யவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
செல்லூர் ராஜூ
மேலும், ராஜீவ் கொலை வழக்கு பற்றிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேர் விடுதலையில் தமிழக அரசு எந்த தாமதமும் செய்யவில்லை. என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “சேலம் எட்டு வழிச்சாலை பிரச்னையில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை. அதற்கு பதிலாக மாற்று வழி கண்டறிந்து அதனை தமிழ்நாடு முதலமைச்சரே அறிவிப்பார்” என்றார்,
Last Updated : Apr 26, 2019, 11:22 AM IST