தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீர்த்தேக்கம் தூர்வாரப்படாததால் குடிநீர் இன்றி பொது மக்கள் அவதி - திண்டுக்கல்

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை நங்காஞ்சி ஆறு நீர்த்தேக்கம் தூர்வாரப்படாததால் விவசாயம், குடிநீர் இன்றி பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

நீர்த்தேக்கம்

By

Published : Mar 31, 2019, 10:22 AM IST


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை கிராமமானது விவசாயம் நிறைந்த பகுதியாகும். இங்கு உள்ள நங்காஞ்சி ஆற்றை கடந்த 1991ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் பல கோடி ரூபாய் செலவில் புதிய நங்காஞ்சி ஆறு நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு 2008 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

தூர்வாரப்படாதநீர்த்தேக்கம்

இந்த நீர்த்தேக்கத்தின் கொள்ளளவில் சுமார் 254.38 மில்லியன் கன அடி நீர் தேக்கப்பட்டு கடந்த பத்து வருடங்களாக உபயோகிக்கப்படாமல் இருகிக்கிறது. இந்த நீர்த்தேக்கத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தின் ஓராயிரம் விவசாய ஏக்கருக்கும், குடிநீருக்கும் இங்கிருந்துதான் நீர் கொண்டு செல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த நீர்த்தேக்கத்தில் சீமை கருவேல மரங்களும், கற்களும் அதிகளவில் நிரம்பி உள்ளதாலும் மழை காலத்தில் தேங்கும் நீரை விரைவில் நிலத்தடி உறிஞ்சி விடுவதாலும் கடந்த ஐந்து வருடங்களாக இங்கு நீர் தேங்குவதில்லை.

இதனால், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் மிகவும் அவதியுற்று வந்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக அணையில் முற்றிலும் நீர் வற்றியதால் இப்பகுதி மக்கள் குடிநீர் விலைக்கு வாங்கிவருவதாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் நலன் கருதியும், பொதுமக்களின் குடிநீர் நலன் கருதியும் இந்த நங்காஞ்சி ஆறு நீர்த்தேக்கம் தூர்வாரப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


ABOUT THE AUTHOR

...view details