தமிழ்நாடு சட்டபேரவை தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நாளை (ஏப்.6) நடைபெறவுள்ளது. இந்நிலையில், கொடைக்கானல் அருகே சுமார் 25 கிமீ தொலைவில் அமைந்துள்ள சாலை வசதியில்லாத மலைகிராமமான வெள்ளகெவி மலைகிராமத்திற்கு வட்டக்கானல், டால்பின்நோஸ் பகுதி வழியே குதிரைகள் மூலம் மின்னனு வாக்கு பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது.
வெள்ளகெவி மலை கிராமத்திற்கு குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்! - dindugul district news
திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே வெள்ளகெவி மலைக் கிராமத்திற்கு குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரம் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டது.
kodaikanal_vote_box
அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் பாதுகாப்பு பணிக்காக துப்பாக்கி ஏந்திய நக்சல் தடுப்பு பிரிவு காவல்துறையினர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.
இதையும் படிங்க: வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பட்டது- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்