திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வேடசந்தூர் பேரூராட்சி 170ஆவது வாக்குச்சாவடியான அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திமுகவினர் தேர்தல் நடத்தும் அலுவலர்கள்போல் அமர்ந்து பூத் ஸ்லிப் வழங்கி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தெரிந்துகொண்ட அதிமுகவினர் தேர்தல் அலுவலர்கள், காவல் துறையினரிடம் தேர்தல் விதிமுறைகளை மீறி அமர்ந்துள்ளதாகப் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாமல் இருந்ததால் வாக்குச்சாவடிக்கு உள்ளே சென்ற அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் திமுகவினர் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் திடீரென வாக்குச்சாவடி மையத்திற்கு முன்பு குவிந்து அதிமுகவினர் உடன் சாலையில் நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.