திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அரசு நிலத்தில் பட்டா இல்லாமல் சென்ற 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். தற்போது இவர்கள் வசிக்கும் இடங்களை விட்டு வெளியேறும்படி மாவட்ட அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கான பட்டாவினை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி மனு இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த புஷ்பம் கூறுகையில், "சென்ற 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில்தான் நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் தங்கியிருக்கும் வீட்டிற்கு வீட்டு வரி, தண்ணீர் வரி, மின்சாரக் கட்டணம் அனைத்தும் செலுத்திவருகின்றோம். இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த இடத்திலிருந்து திடீரென காலி செய்ய கூறினால் நாங்கள் எங்கு செல்வோம். அதனால் எங்களின் ஏழ்மை நிலையை கருத்தில்கொண்டு இங்கேயே நாங்கள் வசிப்பதற்கு ஏதுவாக ஆட்சியர் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: 'வீட்டுமனை பட்டா வேணும்' 150க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு!